கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி நடைபெற்ற ‘இளைஞர் மாநாடு – 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு விருது வழங்குகின்றனர் சிறப்பு விருந்தினர்கள்.
கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் வணிகக் கல்லூரி மற்றும் வாவ் ஹெச்.ஆர். நிறுவனம் இணைந்து நடத்திய ‘இளைஞர் மாநாடு – 2025’ கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு பொறியியல், கலை – அறிவியல், மேலாண்மைக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் முன்னணி தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்று, மாணவர்களுடன் நேரடி உரையாடலில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் தொழில் வாய்ப்புகள், வேலை சந்தை நிலவரம் மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த சிறப்பு விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் உயர் கல்வி குறித்து தகவல் கண்காட்சி நடத்தப்பட்டு, மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சிகள், மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டல் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில், கே.பி.ஆர். கல்லூரியின் செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் சரவணன், வணிகக் கல்லூரி இயக்குநர் திவ்யா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.