ஶ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி தேவிப்பிரியா 488 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், தருண் 482 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், விநாயக பிருந்தா 481 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு எஸ்.என்.ஆர் நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஊக்கத்தொகை அளித்து வாழ்த்து தெரிவித்தார். நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், பள்ளி முதல்வர் சாரதா வாழ்த்து தெரிவித்தனர்.
2024-25 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.