கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக,  “அக்னிதம் 2025”- விளையாட்டு விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமையேற்று, உடலை உறுதியாக்குவதன் மூலம் மனஆரோக்கியத்தைப் பெறலாம் என அறிவுறுத்தினார். உடற்கல்வித்துறையின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக ஆண்டறிக்கையினை உடற்கல்வித்துறையின் இயக்குநர் தமிழரசி வாசித்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்புப் புலனாய்வு பிரிவின் அதிகாரி மயில்வாகனன் கலந்துகொண்டு, மாணவர்கள் தம் நடைமுறை வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் பயணித்து வெற்றிக்கான இலக்கினை அடையவேண்டும். தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றினால் முன்னேற்றத்தை எளிதில் பெறலாம் என எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றுதல், கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல், மாணவர்களின் சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைநிகழ்வுகள் முதலியவை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விளையாட்டு விழாவையொட்டி நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.