உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1.35 மில்லியன் மக்கள் சாலை விபத்துக்களால் மடிகின்றனர் என்றும் பல லட்சக்கணக்கானோர் கடுமையாக காயமடைகின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. சாலை விபத்துக்குள்ளாபவர்களுக்கு குறித்த காலத்தில் முதலுதவியும் மருத்துவமனைகளில் சிகிச்சையும் தேவைப்படுகிறது.

அட்வான்ஸ்டு ட்ராமா லைஃப் சப்போர்ட் திட்டம் மூலம் விபத்துக்களால் ஏற்படும் பல்வேறு வகையான காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக விபத்து சிகிச்சை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு    இரண்டு நாட்கள் நடைபெற்றது. விபத்துகால நிர்வாகம் குறித்த விவாதங்கள், கலந்துரையாடல்கள், விபத்துக்கால சிகிச்சைகள் குறித்த நேரடி செயல் விளக்கம் முதலானவை நடைபெற்றன. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கருத்தரங்கைத் துவக்கி வைத்து  பேசியதாவது: தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களின் தாக்கம் குறித்து பேசினார். சிறந்த வசதிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் கே.எம்.சி.ஹெ.ச் மருத்துவமனை விபத்துக்கால சிகிச்சையில் முதல்நிலை மையமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,  மருத்துவ குழுவினர்களை மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பாராட்டினார். தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், துறை வல்லுனர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.