கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் “12-வது பட்டமளிப்பு விழா” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழகக் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரவி மற்றும் கௌரவ விருந்தினராக ஆட்டோடெஸ்க் பிரெய்டு நெட்ஒர்க் நிறுவனத்தின் ஆசிய – பசிபிக் பொறுப்பாளர் கிருஷ்ண சதுர்வேதி கலந்து கொண்டு 15 துறைகளைச் சேர்ந்த 715 மாணவ, மாணவியர்களுக்குப் பட்டங்களை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் ரவி தனது உரையில், பெற்றோர்களின் தியாகத்தில் தான் இந்த பட்டமானது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. நீங்கள் பெற்ற கல்வி அறிவை கொண்டு சமுதாயப் பிரச்சனைகளுக்கு உதவுமாறு பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதற்கு ஆர்வமுடன் செயல்படவேண்டும். மேலும், மாணவர்கள் தேவையற்ற சிந்தனைகளில் மூழ்கிவிடாமல் போதைப்பழக்கங்களில் வீழ்ந்துவிடாமல் எப்போதும் விடாமுயற்சியுடன், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் அப்பொழுதுதான் வாழ்வில் முழுமையான வெற்றி பெற முடியும் என்று அறிவுறுத்தினார்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், முதன்மை செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், அனைத்து துறை டீன்கள், துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.