காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் மாணவர்களுக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

1. a 1 scaled

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஜெனி அகல்யா எனும் மாணவி குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வாங்கியதற்கு மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1. sampath kumar scaled

தொடந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சம்பத்குமார், தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 501 பள்ளிகளில் புதிதாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 56,560 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

கோவை இட்லி பாட்டிற்கு ஈரான் போர் காரணமாக சிலிண்டர் கொடுப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது.  தற்பொழுது பாட்டிக்கு சிலிண்டர் விநியோகம் தொடரப்பட்டுள்ளது என்றார்.