கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா உப்பிலிபாளையம் நடுநிலை பள்ளியில் கொண்டாப்பட்டது. மாணவர்களுக்கு பிளாஸ்டிக் சேர், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமையாசிரியர் கருணாகரன், அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

