நடுத்தர நிறுவனங்களுக்கான பி2பி பிரிவில் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் தளங்களுக்கான கண்டுபிடிப்புகளில் தலைமைத்துவத்திற்கான 2025 தேசிய விருதை கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல்-க்கு நாஸ்காம் வழங்கியுள்ளது.
இந்த விருது கே.ஜி.ஐ.எஸ்.எல். இன் புதுமையான தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அதன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். புதுதில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நாஸ்காம் தலைவர் ஸ்ரீ ராஜேஷ் நம்பியார் முன்னிலையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த விருதை கேஜிஎஸ்எல் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரசாத் சண்முகம் அமெரிக்காவின் இண்டியானா மாநில செயலாளர் டியாகோ மொராலெஸியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.