கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர், அகில இந்திய அளவிலான தல் சைனிக் முகாம் – 2026ல் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

கல்லூரியின் இணை தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் ஸ்ரீதர் வழிகாட்டுதலின் கீழ், கணினி அறிவியல் துறையில் மூன்றாமாண்டு படிக்கும் சரண், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநரகத்தின் சார்பில் அகில இந்திய தல் சைனிக் முகாமில் பங்கேற்றார்.

இதில், தேசிய அளவிலான வரைபட வாசிப்பு போட்டியில், 4 (தமிழ்நாடு) தேசிய மாணவர் படை பட்டாலியனை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே சீனியர் டிவிஷன் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும், ஒன்பது முகாம்கள் மற்றும் 90 நாட்கள் பயிற்சியை நிறைவு செய்து, மாநில அளவிலான டி.எஸ்.சி., இன்டர் குரூப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

மாணவரின் சாதனையை கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, செயலாளர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டினர்.