கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 26) பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் ஆளுநர்கள், அமைச்சர்கள், தொழில் முனைவோர்கள், திரைத்துறை பிரபலங்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்கள்:
ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
தொழில் முனைவோர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள்:
பண்ணாரி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியனம், சோழமண்டல குழுமத் தலைவர் வேலையன் சுப்பையா, அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த சங்கீதா ரெட்டி உள்ளிட்ட தொழில் முனைவோர்களும், நடிகர்கள் சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ரா மற்றும் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள்:
ஈஷாவின் வழிகாட்டுதலில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 15 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இசை நிகழ்ச்சிகள்:
விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவின் பாடகி சுபா ராகவேந்திரா, ‘பாரடாக்ஸ்’ என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் – அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
இலவச இருக்கை வசதி:
விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழா, பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் இணைவை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.