பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்விற்கு பாரதீயா வித்யா பவன் கோவை மையம் தலைவர் பி. கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். இதில், தமிழ் மாமணி விருதினை தமிழ் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் புலவர் அமுதனும், தமிழ்ப்பணிச் செம்மல் விருதினை மரபின் மைந்தன் முத்தையாவும் பெற்றனர்.