ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை சார்பில், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் சிறப்பு மையத்தின் திறப்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்விற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். எந்த்து டெக்னாலஜி சல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் மூர்த்தி கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

கல்லூரி மற்றும் எந்த்து டெக்னாலஜி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வமைப்பு, தொழில், கல்வித்துறை இடையேயான இணைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் மாணவர் பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி, நேரடி திட்ட மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். சிறப்பு மையம், மாணவர்களை அடுத்தகட்ட தொழில்நுட்பங்களுடன் ஆய்வு, கண்டுபிடிப்பில் முன்னிலை வகிக்க வைக்கும் பயிற்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாகச் செயல்படும்.