சித்தர்களின் ஜீவசமாதிகளை எளிய முறையில் வழிபடலாம் அதிகம் செலவில்லாமல் அகர்பத்தி, விளக்கேற்றி, இனிப்பு ஆகியவற்றைப் படைத்து நாம் சித்தர்களின் ஜீவசமாதிகளை வழிபட்டு வந்தால் அவர்களின் ஆசி பெறலாம்.
பண ரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள், பண நெருக்கடி, தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள், முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை, ஒருகிலோவுக்குக் குறையாமல் டைமண்டு கல்கண்டு. அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள். கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும், கொட்டைப் பாக்கும், சந்தன பத்திக் கட்டும், ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி தேங்காய் உடைத்து,கற்பூரம் ஏற்றி, சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வ சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய் தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
இப்படித் தொடர்ந்து 08 வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையில் வழிபாடு செய்து வந்தாலே போதும். பிரச்னைகள் படிப்படியாகக் குறையும்.