இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த வான்படைப் பிரிவு தேசிய மாணவர் படை சார்பாக 150 என்சிசி கேடட்கள் கலந்துகொண்டனர்.

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ் பிரபு நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கினர். நிகழ்ச்சிக்கு வான்படைப் பிரிவு என்சிசி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுதான்சு ராய் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் நடராஜன், யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, மாணவர்கள் தினசரி யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர், பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.