கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறை, முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக விஸ்டியான் கார்ப்பரேஷனின் மூத்த திட்ட மேலாளர் முகமது ஆசாத் அப்துல் கரீம் கலந்து கொண்டு பேசுகையில்: தொழில் துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும், தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்கத் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்தார்.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், முதன்மைச் செயல் அதிகாரி முருகையா, பதிவாளர் பிரதீப், பேராசிரியர்கள், மாணவர்களை கலந்து கொண்டனர்.
