டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் ரமேஷ், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

NCC C scaled

குழு கலந்துரையாடலில் மூத்த முன்னாள் என்.சி.சி கேடட்கள் பங்கேற்று, என்.சி.சி பயிற்சியின் மூலம் பெற்ற ஒழுக்கம், தலைமைத்துவம், குழுப்பணி, நேர மேலாண்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை தங்களது தொழில் வாழ்க்கையில் எவ்வாறு பயனுள்ளதாக அமைந்தன என்பதை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் என்.சி.சி கேடட்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரியின் முன்னாள் என்.சி.சி மாணவர்கள், பேராசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.