கோவை, எட்டிமடையில் அமைந்துள்ள தேசபக்தி கோட்டையில் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ‘யுனிவர்சல் பிரதர்ஹுட் அசோசியேஷன்’ மற்றும் ‘ஜெய்ஹிந்த் ஃபவுண்டேஷன்’ ஆகியவை இணைந்து, வழக்கறிஞர் நந்தகுமார் தலைமையில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

நிகழ்வில், சுதந்திரப் போராட்ட வீரர் பி.ஏ. வடிவேலு பிள்ளையின் கொள்ளுப் பேரனும், நேரு கல்விக் குழுமத்தின் இயக்குநருமான முரளிதரன், ராஜாத்தி அம்மாள், சர்வதேச வணிகத் துறையில் முக்கியப் பிரமுகரான சுந்தரராமன் மற்றும் கோயம்புத்தூரின் முன்னணி தொழிலதிபரான சண்முகநாதன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முன்னணி தொழிலதிபர்கள், மருத்துவர்கள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
