சுகுணா குழுமங்களின் நிறுவனர் ஜி. ராமசாமி நாயுடு, நிறுவனர் தினத்தை முன்னிட்டு, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து  இலவச கண் பரிசோதனை முகாமை, சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இந்நிகழ்வு சுகுணா குழுமத் தலைவர் லட்சுமி நாராயணசாமி, அறங்காவலர் சுகுணா, இயக்குனர் சாந்தினி அனீஸ் குமார், டீன் ரம்யா சந்தோஷ், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

4. a 6 scaled

முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. லோட்டஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் கண் பார்வைத் திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, கண் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மற்றும் முறையான கண் பராமரிப்பின் அவசியம் குறித்து மருத்துவக் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.