அகில இந்திய தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜூனியர் ஆண்கள் பிரிவில், கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிலும் என்.சி.சி. கேடட் ஜெயராஜ் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வெற்றி பெற்றதற்கான பதக்கத்தை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் என்.சி.சி. இயக்குநரகத்தின் துணை தலைமை இயக்குநர் கமடோர் நம்பியத் சுதீப்பிடம் இருந்து பெற்றார்.

தேசிய அளவிலான இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அகில இந்திய என்.சி.சி சார்பில் நடைபெறவுள்ள 35-வது அகில இந்திய ஜி.வி. மாவலங்கர் விளையாட்டுத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.