கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44வது பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மகளிர் தடகள அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இப்போட்டியில் 110 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்த கே.பி.ஆர்., கல்லூரி அணி, 10 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியது.
வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வித்துறை இயக்குநர் மற்றும் பயிற்சியாளர்களைக் கல்லூரி நிறுவனர் கே.பி.ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டினர்.
