கோவை, அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு ரத்தன், 2026ம் ஆண்டுக்கான சின்மயா தமிழ்நாடு மாநில அளவிலான பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டியில் ‘சிறந்த சாதனையாளர் விருது’ பெற்றுள்ளார்.
கோவை மண்டல அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பள்ளியின் சார்பில் பங்கேற்ற விஷ்ணு ரத்தன், தனது திறமையால் கோப்பை மற்றும் சான்றிதழைப் பெற்றார். அவரது சாதனையைப் பள்ளி முதல்வர் வித்யாசங்கர், நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
