சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் “நெக்சோரா 2026” துறைச் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

கல்லூரி முதல்வர் ராஜ்குமார் சங்கத்தைத் தொடங்கி வைத்து பேசுகையில்: மாணவர்கள் கல்வியுடன் இணைந்து தொழில்நுட்ப திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சங்கத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜஸ்கோ டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் லக்ஷ்மிநரசிம்மன் கூறுகையில்: தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள், தொழில் துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் மாணவர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குநர் சேகர், கணினி அறிவியல் துறைத் தலைவர் கணேசன்,   கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.