கோவையில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்டோரின் கச்சேரிகள் நடந்துள்ளது.
அந்த வகையில் மீண்டும் கோவையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் நேரலை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் 18ம் தேதி இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், தற்போது தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக வரும், ஜூன் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி கோவைபுதூர் அருகே ஜி-ஸ்கொயர் வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 20 முதல், 25 ஆயிரம் பேர் வரை அமரலாம். நிகழ்வுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியேற 4 வழிகள் அமைக்கப்படும். காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கோவைபுதூர் பிரிவு ஆகிய இடங்களில் இருந்து, வாகன வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.