கட்டடக்கலை ஹார்ட்வேர் தயாரிப்பில் 1944-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஹவுஸ் ஆஃப் ஜாலி நிறுவனம், தென்னிந்தியாவில் தனது விற்பனை வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சென்னையில் பிரத்யேக விற்பனைக் குழுவை அமைத்துள்ளது.

இதற்காக தென் மண்டலத் தலைவர், மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் முக்கிய நகரங்களுக்கான விற்பனைக் குழுக்களை நிறுவனம் நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் டீலர்கள், கட்டடக் கலைஞர்கள், உள்துறை வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டுமானத் திட்டப் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

8a 12

வட இந்தியாவில் வலுவான சந்தை இருப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இதுவரை தென்னிந்தியாவில் மொத்த விற்பனை வலையமைப்பு மூலம் செயல்பட்டு வந்தது. தற்போது பிரத்யேக விற்பனை அமைப்பை உருவாக்கியிருப்பதன் மூலம், இப்பகுதியில் தனது வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முனைந்துள்ளது.

கீல்கள், உயர்தர மோர்டிஸ் கைப்பிடிகள், இயந்திர மற்றும் டிஜிட்டல் பூட்டுகள், சமையலறை மற்றும் வார்ட்ரோப் பொருத்துதல்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடக்கலை ஹார்ட்வேர் தயாரிப்புகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் பார்கவா கூறுகையில், சென்னை எங்களுக்கு எப்போதும் முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. இங்கு பிரத்யேக விற்பனைக் குழுவை அமைத்திருப்பது, தமிழகச் சந்தையில் கூடுதல் கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவதற்கான எங்கள் திட்டத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.