இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பாக 2024-2025ம் கல்வியாண்டிற்கான பாரதியார் பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட ஆணழகன் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியானது 60> 65> 70> 75> 80> 95> 90> 90+ கிலோ உடல் எடைப் பிரிவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது. 2024-2025ம் ஆண்டிற்கான மிஸ்டர் பாரதியார் பல்கலைக்கழகம் பட்டத்தை ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தட்டிச்சென்றது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பெற்றது.
சிறப்பு விருந்தினராக,பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு)சின்டிகேட் உறுப்பினருமான ராஜேஷ்வரன் கலந்து கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டியில் பங்கேற்று ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு இந்துஸ்தான் கல்லூரியின் சார்பாக பதக்கங்களும் சுழற்கோப்பைகளும் பல்கலைக்கழகத்தின் சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரசுவதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கருணாநிதி உதவி உடற்கல்வி இயக்குநர்கள் நளினி, ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.