நிர்மலா மகளிர் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவாரூர் பல்கலைக்கழகம், துணைவேந்தர் (பொறுப்பு) சுலோசனா சேகர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்: செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் உலகில், தங்கள் கல்வியைப் பயன்படுத்தி அறம் சார்ந்த துணிச்சல் மற்றும் பல்துறை சார்ந்த சிந்தனையுடன் தலைமை தாங்க வேண்டும்.
சவால்களை வளர்ச்சியாகக் கருத வேண்டும். முடிவெடுக்கும் தளங்களில் தமக்கான இடத்தைப் பிடிக்கும் அதே வேளையில் பிற பெண்களையும் முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
890 மாணவிகள் பட்டம் பெற்றனர். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் மேரி பபியோலா, செயலர் குழந்தை தெரேஸ், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
