கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர் பழனிசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இந்து முருகேசன் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கூப்பர் துணைத் தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவர் மோகன்பாபு பாலச்சந்திரன், ஏ.ஐ.சி.டி.இ பயிற்சி மற்றும் கற்றல் பணியகம் இயக்குநர் சுனில் லூத்ரா கலந்து கொண்டனர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ துறைகளைச் சேர்ந்த 677 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.