ஜெம் செவிலியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெம் துணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் பிஎஸ்சி செவிலியர் 13-வது தொகுதி மற்றும் துணை மருத்துவ அறிவியல் 3-வது தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஜெம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபா பிரவீன் ராஜ் விழாவைத் தொடங்கி வைத்தார். மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மருத்துவமனையின் புற்றுநோய் மைய மருத்துவ இயக்குநர் மற்றும் பிரிவு தலைவர் டாக்டர் பரத் ரங்கராஜன் கலந்துகொண்டு பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் ஒரு மாணவருக்கு சிறந்த மாணவி விருது வழங்கப்பட்டது. 62 பிஎஸ்சி செவிலியர் பட்டதாரிகள், 6 பிஎஸ்சி ஓடிடி (ஆபரேஷன் தியேட்டர் & அனஸ்தீசியா டெக்னாலஜி) பட்டதாரிகள் மற்றும் 4 பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் பட்டதாரிகள் உட்பட மொத்தம் 72 மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் லிசி ரவீந்திரன், துணை முதல்வர் டெபோரா பாக்ய ஜோதி, மாணவர்கள் கலந்துகொண்டனர்.