இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதலாம் ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, செயலாளர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக திருச்சி, தமிழ்நாடு அரசு கூட்டுறவு விற்பனை நிறுவனம், மூத்த மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், அகில இந்திய அளவில் யுபிஎஸ்சி தேர்வில் 18வது இடம் பிடித்த கல்லூரியின் முன்னாள் மாணவி ஸ்ருதி கலந்து கொண்டனர்.

9. hicas a scaled

ராம் பிரதீபன் பேசுகையில்: தன் வாழ்வில் வெற்றி பெற்றதற்கான முதல் காரணம் இக்கல்லூரியில் தான் பயின்ற போது இருந்த ஆசிரியர்கள், கட்டமைப்பு மற்றும் கல்வி கற்றுத் தரும் முறை. மாணவர்கள் தங்களது படிப்பை தாண்டி தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியமானது என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் ஜெயா, நடராஜன், டீன்கள், துறை தலைவர்கள், மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர்.