ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து சுமார் 700 மாணவர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு பரிசுகளையும், விருதுகளையும் வழங்கினார்.

பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, ஆர்.கே.வி. மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. லிசியூ மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாமிடத்தை பிடித்தது.