இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில், “எப்எல்ஒ கேலரியா & ப்ரோமனேட்” என்ற பிரீமியம் ஷாப்பிங் கண்காட்சி கோவையில், தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை ராமகிருஷ்ணா குழுமத்தின் நிர்வாகி நாகஸ்வர்ண லட்சுமிநாராயணசாமி, ருஹ் நிறுவனங்களின் இணை நிறுவனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் மற்றும் ஜெய்ப்பூர் ஜெம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி விகாஸ் பச்சாவத் தொடங்கி வைத்தனர்.