ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கான வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் “மே கார்னிவல் 2026” என்ற மூன்று நாள் பல் சிகிச்சை தகவல் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி இன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி மே 14 முதல் 16, 2026 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால்,

மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் தினகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வாய்நல விழிப்புணர்வு சொற்பொழிவுகள், பல் சிகிச்சை கண்காட்சிகள், விழிப்புணர்வு விளையாட்டுப் பகுதிகள், சரியான பல்துலக்கும் முறைகள் குறித்த நேரடி விளக்கங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

பதிவு செய்யும் பொதுமக்களுக்கு இலவச பல் மருத்துவ வெளிநோயாளர் பதிவு அட்டை வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட பல் சிகிச்சைகளுக்கு மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் 20 சதவீத சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.