கோவை அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில், வாய்வழி சுகாதார விழிப்புணர்வு திட்டம் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் முதல்வர் ஸ்ரீ வித்யாசங்கர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ண பிரியா கலந்துகொண்டு, 1 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, வாய்வழி சுகாதாரத்தைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கலந்துரையாடல் நிகழ்வில், சரியான முறையில் பல் துலக்கும் முறைகள், வலுவான பற்களுக்கான ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், பல்ப் பிரச்சினைகளைத் தடுக்கும் வழிகள் மற்றும் வாய்வழி ஆரோக்கியம் குறித்த மூடநம்பிக்கைகள் மற்றும் உண்மைகளை டாக்டர் கிருஷ்ண பிரியா விளக்கினார். அனைத்து மாணவர்களுக்கும் விரிவான பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
