ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தூய்மை திருவிழா-2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கூடுதல் வளர்ச்சி துணை ஆட்சியர் சங்கத் பல்வாந்த் வாகே, திட்ட உதவி அதிகாரி அப்துல் வஹாப், தொகுதி மேம்பாட்டு அலுவலர் சரவணன், திருமதி சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பங்கேற்ற அனைவரும் “வாரத்திற்கு ஒரு மணி நேரம் தூய்மைக்காக ஒதுக்குவோம்” என உறுதிமொழி எடுத்தனர். மாணவர்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதல்வர் சுப்பிரமணி தலைமையில், மாணவர்கள் மலுமிச்சம்பட்டி பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை தேசிய நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் கார்த்திக், முனைவர் ச. யோகானந்த், செல்வி முத்துமணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.