தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கோயம்புத்தூர் மண்டல அளவில் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஏர் ரைஃபிள் அகாடமி மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ரோஹேல் அய்மான் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், நார்ஷன் லீ ரிச்சர்ட் மற்றும் ஹேமந்திரா ஆகியோர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
மேலும், ஸ்ரீ வைஷ்ணவி, ஓப்பன் சைட் ஏர் ரைஃபிள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். சுபசக்தி, பீப் சைட் ஏர் ரைஃபிள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், இதழ்யா ஸ்ரீ ஏர் ரைஃபிள் ஓப்பன் சைட் பிரிவில் நான்காம் இடத்தையும் பெற்று பதினோறாயிரம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றனர். மாணவர்களுக்கான பயிற்சிகளை கல்லூரியின் இணை என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் ஸ்ரீதர், இளநிலைப் பயிற்சியாளர் சதீஷ் ஆகியோர் வழங்கினர்.
போட்டியில் நாமக்கல், சேலம், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் இந்தச் சாதனையை கே.பி.ஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணண், முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டினர்.
