தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் கோவை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயலுவதாக போட்டியிடும் பிறக்காட்சிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை வைத்து வருவதை தற்போது சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது.

சிங்கநல்லூரில் அ.தி.மு.க  பணப்பட்டுவாடா

– த.வெ.க. குற்றச்சாட்டு

நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் ரூ.10,000 மதிப்புள்ள செக் ஸ்லிப் போன்ற கூப்பனை வழங்கியதாக த.வெ.க.வினர் குற்றச்சாட்டு எழுப்பினர். இதுதொடர்பாக பறக்கும் படையினரிடன் அவர்கள் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

கோவை தெற்கில் தி.மு.க. பணப்பட்டுவாடா

-அ.தி.மு.க குற்றச்சாட்டு

நேற்று இரவு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 10 பகுதிகளில் திமுகவினர் பணவினியோகம் செய்ததாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இன்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அதிமுக கோவை தெற்கு வேட்பாளர் புகார் தெரிவித்துளளார்.