கோவை, கேம்போர்டு சர்வதேசப் பள்ளியின் 17-வது நிறுவனர் தின விழா ‘டைனமிக்ஸ் 2026’ எனும் தலைப்பில் நடைபெற்றது.

பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியை பூனம் சியால் வரவேற்புரை வழங்கினார்.

5c scaled

சிறப்பு விருந்தினராக, இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அருண் கலந்துகொண்டு, பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பாராட்டினார். நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளம் தலைமுறையினரின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுப்புணர்வுடன் தங்களது இலட்சியங்களை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

5a 2 scaled

தொடர்ந்து, 2025–2026 கல்வியாண்டில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், 12ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தகவல் முறைமை ஆகிய பாடங்களிலும், 10ம் வகுப்பில் தமிழ் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ராக் பேண்ட் இசை நிகழ்ச்சி, புற ஊதா ஒளி நடனம், நிழல் நடனம், சமகால மற்றும் பாரம்பரிய நடனங்கள், வீதி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.