குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களில் நேரத்தைச் செலவிடுவதைக் கட்டுப்படுத்த பல நாடுகள் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதில் முக்கியமான சில நாடுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:

சீனாவில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாரத்திற்கு மொத்தம் மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேமிங் அனுமதிக்கப்படுகிறது, அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதி. குழந்தைகள் அதிகம் பயன்படுத்தாமல் இருக்க சமூக ஊடகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. டிஜிட்டல் நேரத்தை கல்வி மற்றும் உடற்கல்வி நடவடிக்கைகளுடன் மாற்ற பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஊக்கமளிக்கப்படுகிறது.

சுவீடனில்  2 வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகள் செல்போன் திரைகளை தவிர்க்க வேண்டும், 2–5 வயதுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும், பிரான்ஸ் குழந்தைகளின் டிஜிட்டல் வாழ்க்கையை சீராக மாற்ற சில முக்கியமான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.பெற்றோர்களுக்கு குழந்தைகள் திரை நேரத்தை கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக பயன்பாட்டில் பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் முயற்சிகள், குழந்தைகளின் மனநலம், உறக்கம் மற்றும் சமூக திறன்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை தடுக்க உதவுகின்றன. டிஜிட்டல் உலகில் குழந்தைகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியையும் மேம்படுத்துகின்றன.