சூரியக் குடும்பத்தின் ஆறு கிரகங்கள் இரவு வானில் ஒரே நேரத்தில் தோன்றும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது.
புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் இரவு வானில் ஒரே நேரத்தில் தோன்றுகிறது. இந்த நிகழ்வு “கிரக அணிவகுப்பு” என அழைக்கப்படுகிறது.
இந்த கிரகங்கள் நேர்கோட்டில் அல்லாமல், சூரியனைச் சுற்றி ஒரே திசையில் அருகருகே தோன்றும். பிப்ரவரி 22, 2025 அன்று, இந்த ஆறு கிரகங்களும் வானில் தோன்றும்; இவற்றில் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி ஆகியவை கண்களால் பார்க்கக்கூடியவை; ஆனால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை பார்க்க தொலைநோக்கி அல்லது டெலிஸ்கோப் தேவைப்படும்.
இந்த கிரக அணிவகுப்பை பார்ப்பதற்கு, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெளிச்ச மாசுபாடு குறைவான இடங்களில் பார்க்கலாம். இந்த அபூர்வ நிகழ்வு, வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
கோவையில் இந்த அரிய நிகழ்வைகான கொடிசியா ரோட்டில் உள்ள மண்டல அறிவியல் மையம், பொதுமக்களுக்காக இரவு வான் நோக்கும் நிகழ்வை நடத்துகிறது. பிப்.,22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழ்வு நடக்கவுள்ளது. மேலும் தகவல்களுக்கு 0422-2963025/2963026