தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் (வேளாண்மைப் பிரிவு) இந்த கல்வியாண்டில் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப் படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இக்கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 2516 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை 4736 (அரசாங்க இடஒதுக்கீடு 3051 + மேலாண்மை இடஒதுக்கீடு 1685 = 4736) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புகளுக்கு 1240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்த சேர்க்கைகளுக்கான இணையதள விண்ணப்பங்களை 06.05.2026 முதல் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வழங்கி வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 08.06.2026 இறுதி நாளாகும்.
எனவே, மாணாக்கர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 08.06.2026க்கு முன்பு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை, பட்டப்படிப்புகளுக்கு 25330 விண்ணப்பங்களும் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு 1564 விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன.
