சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் கனகராஜ் கலந்து கொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தைத் தொடங்கி வைத்து பேசுகையில்: அரசியல் என்பது அனைத்து அறிவியல்களுக்கும் முதன்மையானது. உங்கள் வாழ்க்கையை அரசியல் தீர்மானிப்பதால், உங்கள் அரசியலை நீங்களே தீர்மானிக்க வேண்டும். அரசியலில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

கடந்த 80 ஆண்டுகளாக மட்டுமே சாமானிய மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த ஜனநாயக உரிமையையும் அரசியலமைப்பையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

4. sachida scaled

பள்ளிச்செயலர் கவிதாசன்  தலைமை தாங்கி பேசுகையில்: நம் நாட்டில் சராசரி வாக்குப்பதிவு 60% முதல் 75% வரை மட்டுமே இருக்கிறது. பாதி பேர் வாக்களிக்காவிட்டால் சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. அப்துல் கலாம் சுட்டிக்காட்டியது போல வேளாண்மை, மின்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய நான்கு துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வல்லரசாக மாற வேண்டுமெனில், திறமையான ஆட்சியாளர்கள் தேவை என்று பேசினார்.

நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், வரலாற்றுத் துறை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.