ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001ல் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கினார்.

jublee 2 scaled

முன்னாள் மாணவர்கள், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு தொழில் முனைவோர் ஆவதற்கும் தற்போதைய திறன் படைத்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புக்கு ஊக்கம் தருவதற்காக ரூபாய் 30 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர். முன்னதாக ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

விழாவில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி  ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், கல்லூரி முதல்வர் சௌந்தர்ராஜன், முன்னாள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.