பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், அவசர காலங்களில் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்படும் நேரங்களில் பதற்றமடையாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்களுக்கு நேரடி செயல்விளக்கமும், நடைமுறைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் வித்யாசங்கர் செய்திருந்தார்.
