தீபாவளியை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், எல்.சி. மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் விஜயா ஹைட் பார்க் குடியிருப்புவாசிகள் இணைந்து, தொடர்ந்து 3வது ஆண்டாக, தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தினர்.

கவுண்டம்பாளையம் கருணை இல்லம், ராம்நகர் டி.எ.டி.எஸ்.எஸ் பள்ளி மற்றும் டான் போஸ்கோ அன்பு இல்லம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 152 மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், உணவு மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன.

4b scaled

எல்.சி. மருத்துவ அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் வித்யா ராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். ஸ்ரீராம் விஜயா ஹைட் பார்க் குடியிருப்புவாசிகளான அனிதா வடிவேல், ஸ்ரீதர், குப்புசாமி, லாவண்யா தாமோதர் மற்றும் சுகந்தி ஆகியோர் பரிசுப் பொருட்களை வழங்கினர்.