கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் 2025-2026ம் ஆண்டிற்கான வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் ரத்தினம் குளோபல் பல்கலைக்கழகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.
இதில் 34 அணிகளை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் தலைவர் மதன் ஏ.செந்தில் தலைமை தாங்கினார். செயலாளர் அனில் குமார் 2025-2026 ஆண்டிற்கான சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும், பொருளாளர் சண்முகம் வரவு- செலவு கணக்கு விவரங்களையும் சமர்ப்பித்தனர்.
துணைத் தலைவர் ராஜா மற்றும் சட்ட ஆலோசகர் கணேசன் ஆகியோர் சிறந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களைப் பாராட்டினர். 2025-2026 ஆண்டின் பள்ளிகளுக்கிடையே கிட்டு கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
