பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. தேசிய தடகளப் போட்டியில், எட்டிமடை அம்ருத வித்யாலயம் பள்ளி மாணவர்களான முகிலன், ரியா ஆகியோர் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
14 வயதிற்கு உட்பட்டோர் சிறுவர் பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில், 1.69 மீட்டர் உயரத்தைத் தாண்டி முகிலன் தங்கப் பதக்கம் வென்றார். 7ம் வகுப்பு மாணவியான ரியா, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்று இரட்டைச் சாதனை படைத்தார்.
100 மீட்டர் ஓட்டத்தை 13 வினாடிகளிலும், 200 மீட்டர் ஓட்டத்தை 26.53 வினாடிகளிலும் நிறைவு செய்த ரியா, சி.பி.எஸ்.இ. அண்டர்-14 பிரிவின் மிக வேகமான சிறுமி என்ற அங்கீகாரத்தையும் பெற்றார்.
