ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசுகையில்: சட்டக்கல்வியின் முக்கியத்துவம், சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்துறையில் மாணவர்களுக்கு உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து  எடுத்துரைத்தார்.

3e 2 scaled

ஒவ்வொரு மாணவரும் சட்டம் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் நீதித்துறை, வழக்கறிஞர் தொழில், நிறுவனச் சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

மூத்த வழக்கறிஞர் நாகசுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் பதிவாளர் ராஜ் மற்றும் கேஎஸ்ஆர் & கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரர் ரவிச்சந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மதன் ஆ.செந்தில் தலைமை தாங்கி பேசுகையில்: மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் நடைமுறைத் திறன்கள், உலகளாவிய அறிவு, தொழில்நுட்பப் புரிதல் மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சட்டத்துறையில் ஏற்படுத்திவரும் மாற்றங்களை அறிந்து, சர்வதேசத் தரத்திற்கு இணையான சட்ட வல்லுநர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் எனத் தெரிவித்தார்.

3d 3 scaled

தொடர்ந்து ரத்தினம் சட்டப்பள்ளி மற்றும் முன்னணி சட்ட நிறுவனங்களான ரமணி & சங்கர், கேஎஸ்ஆர் & கோ மற்றும் சுரானா & சுரானா நிறுவனத்தின் கோவை கிளை ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சட்ட மாணவர்களின் வாதிடும் திறன், சட்ட அறிவு மற்றும் நீதிமன்ற நடைமுறைகள் குறித்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் மாதிரி நீதிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கிருஷ்ணராஜ், ரத்தினம் கல்விக்குழுமத்தின் இயக்குநர் ஷிமா செந்தில், துணைத்தலைவர் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.