கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை சார்பில், பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.

ஃபாஸினோடிரஸஸ் பை ஷைன் நிறுவனத்தின் நிறுவனர் ஷைனி நித்யா, ஆடை அலங்கார நிபுணர் பூர்ணமாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

6. a scaled

ஆடைவடிவமைப்புத் துறையைச்  சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து, அந்தந்த மாநிலங்களின் பண்பாடு மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திறமையை வெளிப்படுத்தினர்.

6b 1 scaled

சிறந்த முறையில் ஆடை வடிவமைத்த மாணவர்களுக்கு 10,000 மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.  நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.