கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் ஜூலை 17 முதல் 26 வரை கோவை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. புத்தகக் காட்சியுடன் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகளும் தினந்தோறும் நடைபெற உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, கோவை நகைச்சுவை சங்கம் சார்பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர், கு. ஞானசம்பந்தன் நடுவராக பங்கேற்கிறார்.
“மக்கள் பெரிதும் மகிழ்ச்சியாய் இருப்பது வீட்டிலா? வெளியிலா?” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றத்தில், இரு அணிகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் முனைவர் குரு ஞானாம்பிகை, கபிலா விசாலாட்சி, செல்லகண்ணன், நாகமுத்து பாண்டியன் ஆகியோர் நகைச்சுவையுடன் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு, கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. புத்தகங்களுடன் சிரிப்பையும் சேர்த்து ரசிக்க விரும்பும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம்.
