டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், விளையாட்டு சார்ந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, மாணவர் ஆராய்ச்சி மற்றும் முன்னாள் மாணவர் உறவுகள் துறைத் தலைவர் கௌரிசங்கர், உடற்கல்வி இயக்குநர் அப்துல் ஹலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.